பகுக்கப்படாதது

ஒரு ஆபிஸ் பிக் அப்

தூசியில் படுத்து வெய்யில் சுகம் காணும் தெரு நாய்கள்

புறக்கணித்தும் பூத்து குலுங்கும் கொடுக்காய்ப்புளி மரம்

எரும்பாய் ஊரும் மனிதர்களுக்கிடையில் மடிவாலாவில் இரண்டு கருப்பு கழுதைகள்

சிக்னலில் நிற்கும் வண்டிகள் மறந்து பிலாட்பார்மில் பாடி ஆடும் சிறுமி

காருக்குள் இருந்து கோபுரம் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ளும் ஆபிசர்

கறுத்து திறளும் மழை பெய்யா வானம்

 

Standard
பகுக்கப்படாதது

அறுத்து விட்ட பட்டம்

அறுத்து விட்ட பட்டம் போல்

மனசை ஆட்டி வெக்குது உன் பார்வை.

உன் கண்ணை ப் பார்த்து

குருடா போனாலும்

உன் உருவம் தான் நெஞ்சுக்குள்ள…

தலை தெரிக்க ஓடி அலுத்தாலும்

உனக்கான என் தேடல் முடியலீயே

இன்றும்…

உன் பார்வை தேடி கண்ணாடி கடையில் நான்

உன் வாசம் தேடி பூக்கடையில் நான்

உன் பேச்சை தேடி கூட்டத்தில் நான்

இன்னும் (அறுத்து விட்ட…)

Standard
பகுக்கப்படாதது

துயில் எஸ் ராமகிருஷ்ணன்

துயில் விடு விடு வென்று படிக்ககூடிய ஒரு பெரிய நாவல். 3 கதைகளின் நிகழ்வுகளும் ஒரு சேர எழுதப்பட்டுள்ளது. திருவிழா ஷோ போடும் அழகர், 1800 களில் தெக்கோடில் மிஷனரி வேலை செய்த எலன் பவர், கொண்டலு அக்கா. மூவரும் வெவ்வேறு நிலைப்பாடு, காலம், முற்றிலும் எதிர்பார்க்க முடியாத கடந்த காலத்தை கொண்டவர்கள். எனக்கு அழகரின் கதை தான் பிடிச்சது. இடையில்வந்து கொண்டே இருக்கும் நோய், துயில்  பற்றிய அலைகள் பாதித்தது முதல் பாதியில், பின்னால் கொஞ்சம் அலுக்க ஆரம்பித்துவிட்டது. ஏனோ முடிவு என்னை ரொம்ப பாதிக்கலை. என்னை பொருத்தமட்டில் ராமகிருஷ்ணனின் சிறந்த நாவல் அல்ல.

Standard
பகுக்கப்படாதது

எச்சில் இரவுகள்

வாணி ஜெயராமின் குரலில் அரிய பாடல்

Standard
பகுக்கப்படாதது

இராவணன்

இராவணன் படம் பார்த்தேன் குடும்பத்தோட, கைல டிபன், ஜூஸ் எல்லாம் எடுத்துண்டு JC Road பூர்ணிமா ல .

பால்கனி  டிக்கட் 100 ரூபா தான்.

வழக்கம் போல ஒரு சமுக பிரச்சனையை ஒரு தனி மனித பிரச்சனையை சேத்து ரெண்டையும் கொலை பண்றார் மணிரத்னம். இந்த தடவை நக்சலைட்டு, மற்றும் காதல். அதுவும் கொஞ்சம் Stockholm_syndrome குழப்பம் சேத்து.

சந்தோஷ்  சிவன்  மினுக்கறார்   படம்  முழுக்க அந்த பச்சை கே சரியாய் போச்சு.

ஐஸ்வர்யா வுக்கு  வயசானது  தெரிகிறது படம்  முழுதும்.

சுஹாசினி  டயலாக்  எழுத  முடியாத  எடத்துல  எல்லாம்  ரெட்டை கிளவி வெச்சு ஒப்பேத்திடறாங்க

பொதுவாவே  டயலாக்  சொல்லிகராப்ல இல்ல.

கார்த்திக் தேசிய விருது supporting ரோல் க்கு  வாங்கணும்

முதல் பாதி பாடலுக்காகவும் , ரெண்டாம்  பகுதி  திருப்பங்கள்  மற்றும்  சண்டை  காட்சி க்காகவும் , கடைசியா  ஐஸ்வர்யா  வுகாகவும்   (ஆமாம்  இன்னொரு  படம்  அவளை  heroine ரோல்  ல  பாக்கறதோட  supporting ரோல்  தான்) , காட்டு  சிறுக்கி  பாடலை இரக்க மனதோடு  ஒரு  நிமிடமா   சுருக்கியதற்க்காகவும் , ஒரு தடவை மட்டும் பார்க்கலாம்.

Standard